மொத்த தாக்குதல்களின் எண்ணிக்கை:
0
பாதிக்கப்பட்டவரது மதம்:
-
0%
-
0%
-
0%
The National Christian Evangelical Alliance of Sri Lanka (NCEASL) documents incidents of attacks against persons and groups on the basis of their religious identity. During the period November 2023 to October 2024, it documented over 100 such incidents. Many of these incidents potentially constitute violations of Sri Lankan law, including Sri Lanka’s Constitution and penal legislation.
தரவு மையத்தில் வகைப்படுத்தப்பட்ட சம்பவங்களை மதிப்பிட்ட இந்த ஆய்வு, பல்வேறு வகைகளின் அளவீட்டுப் பிரிவினை உருவாக்கிக் கொண்ட பின்னர், தனிநபர்களையும் குழுக்களையும் அவர்களது மத அடையாளத்தைக் கொண்டு பாதுகாக்கும் இலங்கை சட்டத்தின் குறிப்பிட்ட விதிகளின் கூறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு சம்பவத்தையும் மதிப்பீடு செய்தது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், நிகழ்ந்த சம்பவம் ஒன்று இலங்கை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதா அல்லது இலங்கை சட்டத்தின் கீழ் குற்றமாக அதனைக் கொள்ளலாமா என்பது குறித்த சட்டப்பூர்வ கருத்தை இந்த ஆய்வு வழங்குகிறது.
மதத்தின் அடிப்படையில் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு ஏதேனும் வடிவமாகத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு செயல்கள், நடைமுறைகள் மற்றும் கொள்கைகளைக் குறிப்பிடுவதற்கான ஒரு குடைக்கீழ் சொற்பதமாக ‘தாக்குதல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இச் சொல் பின்வரும் வகைகளை உள்ளடக்கியது:
ForRB ல் பல விடயங்கள் உள்ளன. முதலாவதாக, மதம் அல்லது நம்பிக்கையை வைத்திருக்க அல்லது ஏற்றுக் கொள்ள (அந்தவகையில் மாறிக் கொள்ளவும் முடியும்) ஒருவருக்குள்ள சுதந்திரத்தை உள்ளடக்கியது. அத்துடன், ஒருவர், தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ வழிபாடு, அனுசரிப்பு அல்லது கற்பித்தல் மூலம் தனது மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தக் கொண்டுள்ள சுதந்திரத்தையும் ForRB உள்ளடக்கியது.
வழிபாடு: நேரடியாக நம்பிக்கையை வெளிப்படுத்தும் சடங்கு மற்றும் செயற்பாடுகளைக் குறித்து நிற்பதுடன், அவற்றுடன் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்களைக் கட்டுதல், சடங்கிற்கான மந்திரங்களையும் பொருட்களையும் உபயோகித்தல், சின்னங்களை உடலிற் தரித்தல், மற்றும் விடுமுறை நாட்களையும் ஓய்வு நாட்களையும் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் வரை நீள்கிறது.
கடைப்பிடித்தலும் நடைமுறையும்: சடங்குச் செயற்பாடுகள் மட்டுமல்லாமல், உணவு விதிமுறைகளைக் கடைப்பிடித்தல், தனித்துவமான உடை அல்லது தலைக்கான ஆடையை அணிதல், வாழ்க்கையின் சில கட்டங்களுடன் தொடர்புடைய சடங்குகளில் பங்கேற்றல் மற்றும் ஒரு குழுவினரால் வழக்கமாகப் பேசப்படும் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்துதல் போன்ற பழக்கவழக்கங்களும் இதில் அடங்கும்.
பயிற்சி மற்றும் கற்பித்தல்: மதக் குழுக்கள் தங்கள் அடிப்படை விவகாரங்களை நடத்துவதில் ஒருங்கிணைந்த செயல்கள், அதாவது தங்கள் மதத் தலைவர்கள், பாதிரியார்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், குருத்துவக் கல்லூரிகள் அல்லது மதப் பள்ளிகளை நிறுவும் சுதந்திரம் மற்றும் மத நூல்கள் அல்லது வெளியீடுகளைத் தயாரித்து விநியோகிக்கும் சுதந்திரம் ஆகியவை அடங்கும்.
‘பாகுபாடு’ இவ்வாறு வரையறுக்கப்படுகிறது:
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு கருத்து, தேசிய அல்லது சமூக நிலை, சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து போன்ற ஏதாவதொரு நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு வேறுபாடு, விலக்கு, கட்டுப்பாடு அல்லது விருப்பு. அத்துடன் அது சமமான வகையில் அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரங்களுடனும் அனைவரும் கொண்டிருக்கும் அங்கீகாரம், மகிழ்ச்சி அல்லது நடைமுறையை ரத்து செய்யும் அல்லது பாதிக்கும் நோக்கத்தையோ அல்லது விளைவையோ கொண்டமைகிறதுது.
சமூக-பொருளாதார பாகுபாடு, அரசியல் பாகுபாடு என்பவற்றோடு சட்டத்தை உபயோகிப்பதில் உள்ள பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாக மத அடிப்படையிலான பாகுபாடு அமையலாம்.
இந்த ஆய்வின் நோக்கத்திற்காக, நிகழ்வு தொடர்பான பாகுபாட்டு செயலானது ஒரு நபர் அல்லது குழுவின் மத அடையாளத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலக்கு வைப்பதாக இருக்க வேண்டும்.
உடல் ரீதியான வன்முறை என்பது தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 310 முதல் 313 வரையின் கீழ் காயப்படுத்தல் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தல் போன்ற செயல்களை உள்ளடக்கியது.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் என்பது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 290 இன் கீழ் ஒரு குற்றமாகக் கொள்ளப்படும் செயற்பாடுகள்.
தூண்டுதல் என்பது ICCPR சட்டத்தின் பிரிவு 290 ன் பிரிவு 3(1) க்குக் கீழான குற்றமாகும்.
அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் என்பது தண்டனைச் சட்டத்தின் 483 மற்றும் 343 பிரிவுகளின் கீழ் குற்றவியலாக ஆகுமளவிற்கு நிகழும் மிரட்டல் அல்லது தாக்குதல் செயலாகும்.
மற்றைய வகை உடல் ரீதியற்ற தாக்குதல்கள் தண்டனைச் சட்டத்தின் 290A முதல் 292 வரையான பிரிவுகள் மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் 15 மற்றும் 16 பிரிவுகள் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் 6(1) பிரிவுகளை உள்ளடக்கிய பிற குற்றங்கள் ஆகும்.
குற்றவாளிகள் என முதல் கட்டமாக வகைப்படுத்தப்படுகிறார்கள் அரசு மற்றும் தனியார் பங்காளர்கள். அரசு பங்காளர்கள் மேலும் அமைச்சுகள், காவல்துறையும் படையினரும், உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என வகைப்படுத்தப்பட, தனியார் பங்காளர்கள் தனிப்பட்ட பிரஜைகள், அமைப்புகள் மற்றும் மத பிரதிநிதிகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த ஆய்வில் மதிப்பாய்வு செய்யப்பட்ட நிகழ்வுகளின் பரம்பலானது இலங்கையிலோ அல்லது இலங்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ தற்போது நிலவும் சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட இடங்களில் NCEASL ன் கண்காணிப்பு வலையமைப்பின் ஊடாக கண்டறியப்பட்ட நிகழ்வுகளால் மட்டுமே இது வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வலையமைப்பால் கண்டறியப்படாத வேறு பல மதத் தாக்குதல் நிகழ்வுகள் காணப்படலாம் எனும் வகையில், இந்த ஆய்வில் வழங்கப்பட்ட அளவீட்டுப் பகுப்பாய்வானது கள நிலையின் ஒரு தோற்றமாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட வேண்டுமே அன்றி அதன் துல்லியமான பிரதிநிதித்துவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
குழுவினர் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் அனைத்துக் கருத்துகளும் உருவாக்கப்பட்டுள்ளன, அந்தவகையில், இலங்கை சட்டத்தின் கீழான அடிப்படை உரிமை மீறல்கள் என்றோ அல்லது குற்றமாகவோ நிகழ்ந்தது என அவற்றைக் கருத முடியாது.