இலங்கையின் அனைத்து சட்டக் கட்டமைப்புகளும் மதம் அல்லது நம்பிக்கைளுக்கு ஆதரவானவை.
இலங்கையின் அனைத்து சட்டக் கட்டமைப்புகளும் மதம் அல்லது நம்பிக்கைளுக்கு ஆதரவானவை.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை (ICCPR) அங்கீகரித்த இலங்கை, 2007 ICCPR சட்டப் பிரிவு மூலம் அதனைத் தனது சொந்த சட்டத்தின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது. ஆயினும், இச் சட்டத்தின் பிரிவு 3 ஆனது அதன் சொற் பிரயோகங்கள் பரந்ததாகவும் தெளிவற்றும் இருப்பதன் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச வழக்கையும் (ICERD) இலங்கை அங்கீகரித்துள்ளது.
மத சுதந்திரத்திற்கான வரையறைகள் இலங்கையில் காணப்பட்டாலும் பொதுவாக சர்வதேச விதிகளைச் சட்டம் பின்பற்றுகிறது. ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான உரிமை உள்ளடங்கலாக மத சுதந்திரத்தை இலங்கையின் அரசியலமைப்பு பாதுகாக்கிறது, ஆயினும், சில நேரங்களில் சர்வதேச ஒப்பந்தங்கள் உறுதியளிக்கும் அளவுக்கு அரசியலமைப்பில் உள்ள பாதுகாப்புகள் வலுவாக இல்லை என்பதுடன் பாதுகாப்புக் குறைவாக அமையவும் வழியமைத்து விடுகிறது.
இலங்கையின் சட்டங்கள் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றன, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை குறித்த விடயங்களோடு தொடர்புறுகையில் அவற்றிற்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றன.
இலங்கையின் சட்டங்கள் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றன, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை குறித்த விடயங்களோடு தொடர்புறுகையில் அவற்றிற்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றன.
தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்கள் மத ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பளிக்கின்றன என்பதுடன் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் வரலாற்று மதிப்புள்ள மத ஸ்தலங்களைப் பாதுகாக்க தொல்பொருள் அவசரச் சட்டத்தையும் உபயோகிக்கலாம். மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), ICCPR சட்டம் மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்கள் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டியவை ஆகும். ஆனால் இச் சட்டங்கள் பரந்த போக்கில் விவரிக்கப்பட்டுள்ளதனால், அவை சிறுபான்மை குழுக்களை நியாயமற்ற வகையில் இலக்கு வைக்க சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
குறிப்பாக உங்களது கருத்துகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை ஆதரிக்கும் சட்டங்களைக் கொண்டது இலங்கை.
குறிப்பாக உங்களது கருத்துகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை ஆதரிக்கும் சட்டங்களைக் கொண்டது இலங்கை.
சர்வதேச விதிகளின் கீழ் அனுமதிக்கப்படும் வகையில் சத்தத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் தான் தற்போதைய முக்கிய சட்ட வரம்பு. மத உணர்வுகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மதத்தைப் பற்றி மக்கள் என்ன பேசலாம் என்பதற்கும் பரந்தளவிற் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இவ் விதிகள் மிக விரிவாகக் கூறப்பட்டிருப்பதால், அதிகளவிற் தணிக்கைக்கு உள்ளாக அவை வழிவகுப்பதுடன் உண்மையிலேயே அவசியமான அல்லது அளவான சர்வதேச தரங்களை எட்டாமலும் போகலாம்.
உங்களுடைய மத நம்பிக்கைகளை மற்றவரோடு பகிர்ந்து கொள்வது உட்பட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்த சுதந்திரத்தை ஆதரிக்கும் சட்டங்கள் இலங்கையில் உள்ளன.
உங்களுடைய மத நம்பிக்கைகளை மற்றவரோடு பகிர்ந்து கொள்வது உட்பட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்த சுதந்திரத்தை ஆதரிக்கும் சட்டங்கள் இலங்கையில் உள்ளன.
ஒருவரது மதத்தை மற்றவருக்குப் பரப்பவோ அல்லது ஊக்குவிக்கவோ முயற்சிக்கும் உரிமையை வெளிப்படையாக அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை. நீதிமன்றங்கள் இக் கருத்தை ஆதரித்துள்ளன.
மத மாற்றத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றும் சில முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. ஆயினும், மதத்தை ஊக்குவிப்பது என்பது பாதுகாக்கப்பட்ட உரிமை இல்லையெனினும் அது சட்டத்திற்குப் புறம்பானதும் இல்லை என்கின்றன நீதிமன்றங்கள்
மக்களது மதம் அல்லது நம்பிக்கைகள் காரணமாக அவர்களை நியாயமற்ற முறையில் நடத்தும் எந்தவொரு சட்டமும் இலங்கையில் இல்லை.
மக்களது மதம் அல்லது நம்பிக்கைகள் காரணமாக அவர்களை நியாயமற்ற முறையில் நடத்தும் எந்தவொரு சட்டமும் இலங்கையில் இல்லை.
அனைத்து மதங்களிலும் பௌத்த மதத்திற்கு மிக உயர்ந்த இடத்தை வழங்குகிறது அரசியலமைப்பு.
தமது பெற்றோரது மதத்தைக் கற்றுக் கொள்ளும் உரிமை உள்ளவர்கள் குழந்தைகள். அரச பாடசாலைகளில் மானவர்களைச் சேர்க்கும்போது, அப் பாடசாலை அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்ட போது அங்கிருந்த மதங்களின் கலவை கருத்தில் கொள்ளப்படுகிறது.
அரசியலமைப்பில் உள்ள சில உரிமைகள் பிரஜைகளுக்கு மட்டுமே ஆகும். அதாவது அதே பாதுகாப்புகள் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் 1951 அகதிகள் வழக்கையும் இலங்கை அங்கீகரிக்கவில்லை.
வணக்க ஸ்தலங்களையும் நம்பிக்கை அடிப்படையிலான நிறுவனனக்ளையும் உருவாக்கி, முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டை இலங்கைச் சட்டங்கள் மக்களுக்குத் தருகின்றன.
வணக்க ஸ்தலங்களையும் நம்பிக்கை அடிப்படையிலான நிறுவனனக்ளையும் உருவாக்கி, முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டை இலங்கைச் சட்டங்கள் மக்களுக்குத் தருகின்றன.
வழிபாட்டுத் தலங்களை அமைத்து அவற்றை நடாத்துவதற்குச் சில தடைகள் உள்ளன. அவை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்க சுற்றறிக்கை கூறினாலும் இப் பதிவைப் பெற்றுக் கொள்வது பெரும்பாலும் கடினம். சில வேளைகளில், பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலம் ஒன்று நியாயமற்ற வகையில் இலக்கு வைக்கப்படலாம்.
அரசு சாரா நிறுவனங்கள் தம்மைப் பதிவு செய்து, கட்டாயமாக அரசாங்க விதிகளை பின்பற்ற வலியுறுத்தப்படும் வகையில் புதியதொரு சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தமக்காகப் பேசுவதோ அல்லது அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதோ கடினமாகிறது. இச் சட்டம் குறித்த முறையான கலந்துரையாடல்கள் பொதுமக்களுடன் நடாத்தப்படவில்லை. அத்துடன் முறையான உத்தியோகபூர்வ வரைவு ஒன்று இதுவரை பகிரப்படாததால் மதக் குழுக்களை இது எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இலங்கையில் அனைத்து கலாச்சார, பாரம்பரிய தளங்களும் சமமாகப் பாதுகாக்கப்படுவதுடன் மதம் அல்லது நம்பிக்கைகள் குறித்த மக்களது சுதந்திரமும் சமமாக மதிக்கப்படுகிறது, பிணக்குகள் உள்ள மத இடங்களில் கூட அவ்வாறே.
இலங்கையில் அனைத்து கலாச்சார, பாரம்பரிய தளங்களும் சமமாகப் பாதுகாக்கப்படுவதுடன் மதம் அல்லது நம்பிக்கைகள் குறித்த மக்களது சுதந்திரமும் சமமாக மதிக்கப்படுகிறது, பிணக்குகள் உள்ள மத இடங்களில் கூட அவ்வாறே.
பௌத்த பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் அதேவேளை பௌத்தம் அல்லாத சமூகங்களது மத மற்றும் கலாச்சார தளங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. (உ.ம்: அனுராதபுரத்தில் உள்ள புனித தலத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக செயற்பட்டு வரும் அரசாங்கம் திருகோணமலையில் உள்ள கந்தசாமி மலை போன்ற இடங்களைப் பாதுகாக்க அவ்வளவாக முயவில்லை. அங்கு முக்கியமான புராதனச் சின்னங்கள் சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன).
பாரம்பரியம் மற்றும் தொல்பொருள் குறித்த விடயங்கள் பற்றிய முடிவுகள் பெரும்பாலும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களிடமிருந்தும் நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. குழுக்களிலும் திட்டங்களிலும் அனேகமாகப் பௌத்தத் தலைவர்கள் மட்டுமே காணப்படுகிறார்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாக்கும் சட்டமானது (தொல்பொருள் சட்டம்) பெரும்பாலும் நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்படுவதாகவே கருதப்படுகிறது. சில இடங்களில், நீதிமன்றங்கள் அல்லது உத்தியோகபூர்வ விதிகள் செய்யக் கூடாது எனத் தெரிவித்தாலும் கூட பாதுகாக்கப்பட்ட புராதன இடங்களில் கட்டுமானம் அனுமதிக்கப்படுகிறது. அதேவேளையில் அதே விதிகள் சிறுபான்மை குழுக்கள் தங்கள் மதத் ஸ்தலங்களில் வழிபாடு செய்வதையோ அல்லது விழாக்களை நடத்துவதையோ தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
சில வேளைகளில் மற்றைய மதங்களுக்குப் பிரதானமாகக் காணப்படும் முக்கியமாக இடங்களில் பௌத்த சின்னங்கள் வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அவை ஒழுங்கற்றதாகவோ அல்லது நியாயமற்றதாகவோ அமைந்தன.
சற்றே சாதகமான ஒரு விடயம் என்னவெனில், வட புலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் உள்ள கோயில்களுக்குச் செல்ல இந்துக்களுக்கு அண்மையில் சில நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், நிலங்களைத் திருப்பித் தருவது குறித்தும் நியாயமற்ற முறையில் நடாத்தப்படுவதை வெளிப்படையாக ஆதரிக்காமல் இருப்பது குறித்தும் புதிய ஜனாதிபதி வாய்மொழி வாக்குறுதிகளை அளித்துள்ளார், சிறியதொரு முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.
மத சுதந்திரத்தையும் பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களின் அபிலாஷைகளையும் பாதுகாக்கும் சட்டங்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் அமுல்படுத்தப்ப்டுகின்றன.
மத சுதந்திரத்தையும் பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களின் அபிலாஷைகளையும் பாதுகாக்கும் சட்டங்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் அமுல்படுத்தப்ப்டுகின்றன.
பௌத்த நம்பிக்கைகள் சவால்களை எதிர்கொள்ள நேர்கையில் ICCPR போன்ற சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை விரைந்து பயன்படுத்தும் இலங்கை அதிகாரிகள் மற்றைய மத அல்லது இனக்குழுக்களுக்கு அதையே செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காண்பிப்பதில்லை. சில நேரங்களில், இச் சட்டமானது அரசாங்கத்திற்கு இணைவாக இல்லாத மக்கள் அல்லது நிகழ்வுகளுக்கு எதிராக நியாயமற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை ICCPR சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்த 2024 நீதிமன்றத் தீர்ப்பை ஒரு சாதகமான முன்னேற்றமாக எடுத்துக் கொள்ளலாம். சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய போது இலங்கை மனித உரிமைகள் ஆணையமும் (HRCSL) தலையிட்டு உதவியை வழங்கியுள்ளது.
மத தலங்கள் தொடர்பான சட்டங்கள் சமமாக அமுலாக்கப்படாத நிகழ்வுகளும் உள்ளன. சிறுபான்மை குழுக்கள், குறிப்பாக சுவிசேஷ கிறிஸ்தவ தேவாலயங்கள், அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றன.
மதங்களுக்கு இடையே அமைதியைப் பேணப் பணியாற்றும் சில மத அமைப்புகள் நிலைமை மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் உள்ளூர் அதிகாரிகள் அதிக ஆதரவளிப்பதாகவும் கூறுகின்றன. ஆனால், பிணக்குகள் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் போன்ற அதிகம் உணர்வுரீதியான மதப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் சிவில் சமூகக் குழுக்கள் பெரும்பாலும் அழுத்தத்திற்கு முகம் கொடுப்பதுடன் கண்காணிக்கப்பட்டு, அல்லது அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன.
மத அல்லது இனக்குழுக்களுக்கு இடையிலான சமூகப் பிணக்குகளைக் கையாள்கையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் பல்தரமானவை. சில சந்தர்ப்பங்களில், காவல்துறையினர் நியாயமாகவும் ஆதராஅகவும் செயல்படுகிறார்கள். ஆனால் ஏனைய சந்தர்ப்பங்களில் – குறிப்பாக பாரம்பரிய தளங்கள் சம்பந்தப்பட்டவை – அவர்கள் பௌத்த நலன்களின் பக்கம் சாய்வதாகத் தெரிகிறது.
சில அதிகாரிகள் அல்லது அரசியல் குழுக்கள் மதக் குழுக்களுக்கும் நாத்திகர்/அஞ்ஞானிகளுக்கும் எதிராக பாகுபாட்டை, தீவிரத்தை, அச்சுறுத்தலை, வன்முறையைப் பரப்புவதில் ஈடுபடுகிறார்கள்.
சில அதிகாரிகள் அல்லது அரசியல் குழுக்கள் மதக் குழுக்களுக்கும் நாத்திகர்/அஞ்ஞானிகளுக்கும் எதிராக பாகுபாட்டை, தீவிரத்தை, அச்சுறுத்தலை, வன்முறையைப் பரப்புவதில் ஈடுபடுகிறார்கள்.
2024 ஆம் ஆண்டில் தீவிர பௌத்த குழுக்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறைவாகவே காணப்பட்டாலும், தீவிர இந்துக் குழுக்களின் செயல்கள் அதிகரித்துள்ளன; குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு. ஆனாலும் தமிழ் அரசியல் கட்சிகள் இந்து மதம் சார்ந்து வலுவாக மக்கள் அடையாளம் காணப்படுவதை ஊக்குவிக்காததன் காரணமாக இது சமூகத்தில் அதிக ஆதரவைப் பெறவில்லை.
அரசாங்கத்திற்கோ அல்லது பௌத்த அபிலாஷைகளுக்கோ அச்சுறுத்தலாக ஏதும் காணப்பட்டால் அதிகாரிகள் மிக விரைவாக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்களை நோக்கி நியாயமற்ற முறையில் இலக்கு வைத்த செயல்கள் அல்லது பேச்சுகளின் போது அவர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை.
மதம் மற்றும் மத உணர்வுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ICCPR சட்டம் அல்லது நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சில சட்டங்கள் மிக விரிவாகப் பரந்து எழுதப்பட்டுள்ளன. இதனால் அதிகளவு தணிக்கைக்கு வழிவகுக்கப்பட்டு, நிகழ்வின் தேவைக்கு அல்லது நிலவரத்துக்கும் அப்பால் போய் விடக் கூடும்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகிக்கப்பட்டதாகச் சில அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவை போன்ற நிகழ்வுகள் குறைவாகிக் காணப்பட்டது. தேர்தல் ஆணையமும் தெளிவானதும் சிறந்ததுமான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதனைச் சாதகமானதொரு முன்னேற்றமாகக் கொள்ளலாம்.
மத சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அல்லது மதம் அல்லது நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் குறித்த விடயங்கள் பற்றிப் பேசவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
மத சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அல்லது மதம் அல்லது நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் குறித்த விடயங்கள் பற்றிப் பேசவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மதத் தலங்கள் தொடர்பான பிணக்குகள் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் கடுங்கவலை தெரிவித்துள்ளனர். இவற்ரைத் தீர்ப்பது எந்தவொரு தெளிவான வாக்குறுதிகளையும் இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை என்ற போதிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் (ESA) குறித்து நம்பகமான விசாரணையை ஆரம்பித்தன் ஊடாக ஓரளவு நல்லெண்ணத்தையே வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் முக்கிய மதக் குழுக்கள் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்று வரும் அதே வேளையில், தாம் புறக்கணிக்கப்படுவதாகச் சிறிய மதக் குழுக்களும் பிரிவுகளும் கூறுகின்றன. இந்த அங்கீகாரமின்மை காரணமாகத் தாம் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் அவர்கள் உணர்கிறார்கள்.
சாதகமான விடயம் என்னெவெனில், இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) போன்ற சுயாதீன அமைப்புகள் தலையிட்டு சில மத சுதந்திரப் பிரச்சினைகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளன.
பாகுபாடு, அச்சுறுத்தல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் உட்பட சமூகத்தில் உள்ள பிணக்குகள் ஆனவை மத வெறுப்பினால் அல்லது பக்க சார்பினால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
பாகுபாடு, அச்சுறுத்தல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் உட்பட சமூகத்தில் உள்ள பிணக்குகள் ஆனவை மத வெறுப்பினால் அல்லது பக்க சார்பினால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
மத வெறுப்பு காரணமாக 2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சமூக முன்னெடுப்புப் புறக்கணிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், களுத்துறை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல், கண்டி மற்றும் காலி போன்ற இடங்களில் சில சமூக உறுப்பினர்கள் வேறு சிலருக்கு எதிராக மிரட்டலை உபயோகித்துள்ளனர்.
காவல்துறை அல்லது உள்ளூர் அதிகாரிகள் வழிபாட்டு ஸ்தலங்கள், குறிப்பாக சுவிசேஷ தேவாலயங்கள், செயல்படுவதைக் தடைசெய்த பெரும்பாலான சந்தர்ப்பங்களின் போது உள்ளூர் சமூகங்களின் அழுத்தம் காரணமாக இது இடப்பெற்றுள்ளது.
கொழும்பு, புத்தளம், மன்னார், குருநாகல் மற்றும் கம்பஹாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குறைந்தது ஐந்து தாக்குதல்கள் அல்லது உடல் ரீதியான சண்டைகள் இடம்பெற்றதாக இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ அமைப்பு (NCEASL) தெரிவித்துள்ளது.
மத மோதல்களுடன் தொடர்புடைய கடத்தல்கள் அல்லது கொலைகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குழு வன்முறை மற்றும் தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, குருநாகலில் உள்ள தேவாலயம் ஒன்றினைப் பதிவு செய்யும்படி அல்லது அல்லது மூடும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போது தேவாலயத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளதுடன் மக்கள் பூசையில் கலந்து கொள்ள விடாமல் கிராமவாசிகள் சாலையைத் தடுத்துள்ளனர். ஜூலை மாதம், வத்தளையில் ஒரு தேவாலயத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த பூசைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அயல் வீட்டார் இசையை உரத்த வைத்தும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் போதகரின் மனைவி காயமடைந்தார்.
கிறிஸ்தவ நம்பிக்கை அல்லது அண்மைய மதமாற்றம் காரணமாக இறுதிச் சடங்கு உதவி சங்கத்தின் பொதுவான வளங்களை மக்கள் பயன்படுத்த மறுக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இரு நிகழ்வுகளை மாத்தளையிலும் குருநாகலிலும் NCEASL பதிவு செய்துள்ளது.
மக்கள் தமது மதத்தைப் பின்பற்ற எடுத்துக் கொள்ளும் நடைமுறைகள் மற்றும் போக்குகளானவை ஒரு சமூகத்தினுள்ளும் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையேயும் எழும் பிணக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மக்கள் தமது மதத்தைப் பின்பற்ற எடுத்துக் கொள்ளும் நடைமுறைகள் மற்றும் போக்குகளானவை ஒரு சமூகத்தினுள்ளும் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையேயும் எழும் பிணக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சில சமயங்களில் மற்றைய மதங்களை வருத்தப்படுத்தும் வகையில் சில கிறிஸ்தவ சுவிசேஷக் குழுக்கள் தங்கள் நம்பிக்கையைப் பரப்புவதற்கான முன்னெடுக்கும் “ஆக்ரோஷமான’ முயற்சிகள், சமூகங்களுக்குள்ளும் இடையிலும் பதட்டங்களை ஏற்படுத்துகின்றன எனச் சிலர் நினைக்கிறார்கள். சிலரால் அவமரியாதையாகக் கருதப்படும் இப் பிரசங்கம் அல்லது நடைமுறைகள் போன்ற இச் செயல்கள், சுவிசேஷக் தேவாலயங்களையும் பரந்த கிறிஸ்தவ சமூகத்தையும் எளிதிற் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்கியுள்ளன.
இதேபோல், இலங்கையின் பாரம்பரிய இந்து பழக்கவழக்கங்களுக்குச் சவாலாக இந்துத்துவக் கருத்துக்களின் செல்வாக்கானது இந்துக்களின் சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்துகிறது. ஆயினும், இப் பாதிப்பு அத்தனை கடுமையானதல்ல என்பதுடன் அண்மைய அரசியல் மாற்றங்களால் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது.
வஹாபிசத்தின் வெளிப்படையான பாதிப்புக் குறைந்து விட்டது போலத் தென்பட்டாலும் பரந்த முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) போன்ற சட்டங்களை மாற்றுவதை பழமைவாதக் கருத்துக்கள் கடினமாக்கியுள்ளன. சில கிராமப்புற முஸ்லிம் பகுதிகளில், பெண் பிறப்புறுப்பு அறுப்பு போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களை சமூகத்தின் சிலர் இன்னமும் ஆதரிக்கின்றனர்.
மதக் குழுக்கள் மக்கள் பொது இடத்தில் எவ் வண்ணம் வாழ்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்துவதுடன் இப்போதுள்ள முறைமைக்கு அச்சுறுத்தல் எனத் தாம் பார்க்கும் நம்பிக்கைகளையோ அன்றி நடைமுறைகளையோ ஏற்றுக் கொள்வதுமில்லை.
மதக் குழுக்கள் மக்கள் பொது இடத்தில் எவ் வண்ணம் வாழ்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்துவதுடன் இப்போதுள்ள முறைமைக்கு அச்சுறுத்தல் எனத் தாம் பார்க்கும் நம்பிக்கைகளையோ அன்றி நடைமுறைகளையோ ஏற்றுக் கொள்வதுமில்லை.
சில மதத் தலைவர்கள் பரந்த நோக்குக் கொண்டவராக இருந்தாலும் கூட இன்னமும் இலங்கையில் உள்ள பல தலைவர்கள் LGBTQI+ மக்களையும் பெண்களையும் ஒதுக்கி வைக்கும் கருத்துக்களைக் கொண்டவரக்ளே. பாலின சமத்துவ சட்டம், பெண்களை வலுப்படுத்தற் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் போன்ற சட்டங்களுக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்ட எதிர்ர்பு இதனை மிகத் தெளிவாகக் காண்பிக்கிறது.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உட்பட முஸ்லிம் சமூகத்தின் சிலர் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) மாற்றங்களை தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றனர், அத்துடன், அச் சீர்திருத்தத்தினை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்த்ச் செயற்படுகின்றனர்.
ஒருவர் தனது மதத்தை மாற்றும் உரிமையை அரசியலமைப்புப் பாதுகாக்கிறது என்றாலும், பெரும்பாலான மக்களும் மதத் தலைவர்களும் இதை தனிப்பட்ட முறையிலும் தங்கள் சமூகங்களுக்குள்ளும் எதிர்த்தபடியே உள்ளனர். சில மதத் தலைவர்கள், ‘தவறாக வழிநடத்தும்’ மத போதகர்களைக் கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்குமாறு கேட்டுள்ளனர்; குறிப்பாக பௌத்த போதனைகளைப் பொறுத்தவரை,
இலங்கையின் பல்வேறு மதங்களையும் சார்ந்த மக்களுக்கு சமாதானமாக ஒன்றிணைந்து வாழவும் பணியாற்றவும் ஏதுவான சந்தர்ப்பங்கள் உள்ளன.
இலங்கையின் பல்வேறு மதங்களையும் சார்ந்த மக்களுக்கு சமாதானமாக ஒன்றிணைந்து வாழவும் பணியாற்றவும் ஏதுவான சந்தர்ப்பங்கள் உள்ளன.
அரசினாலோ அல்லது சமூக மட்டத்திலோ தூண்டப்பட்டாலும் சரி மதக் குழுக்களுக்கு இடையேயும் அவற்றுக்குள் ஏற்படும் மோதல்கள் இலங்கையில் மக்கள் பண்டிகைகளைப் பகிர்ந்து கொண்டாடுவது, சடங்குகளில் பங்கேற்பது அல்லது பொதுவான மதத் தலங்களுக்குச் செல்வது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
சவால்கள் சில இருக்கத் தான் செய்தாலும், இலங்கையில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி, பேசி, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இன்னும் இடம் இருப்பதாகவே பல்லிடை மதக் குழுக்களும் வலையமைப்புகளும் தெரிவிக்கின்றன. பல மதத் தலைவர்களும் சிவில் சமூக உறுப்பினர்களும் புதிய சட்டங்களைக் கொணர்வதை விட புரிதலையும் வெளிப்படையான விவாதத்தையுமே அதிகம் விரும்புவதாக ஆராய்ச்சியின் போது கூறினர்.
சமூக வலைத்தள விடயங்கள் மக்களை ஒன்றிணைத்துள்ளதுடன், குறிப்பிட்ட ஓர் இன மற்றும் மதக் குழுவுக்கு எதிராகச் செயற்படவும் ஊக்குவித்துள்ளது.
சமூக வலைத்தள விடயங்கள் மக்களை ஒன்றிணைத்துள்ளதுடன், குறிப்பிட்ட ஓர் இன மற்றும் மதக் குழுவுக்கு எதிராகச் செயற்படவும் ஊக்குவித்துள்ளது.
சில பதிவுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் அல்லது பாரம்பரிய பௌத்த போதனைகளை மாற்றுவதாகக் கருதப்படும் பௌத்த போதகர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறைக்கான அழைப்புகளும் காணப்பட்டன. பிரபல பௌத்த துறவி வண. ராஜாங்கனே சத்த ரத்தன தேரர் உட்பட பலரால் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராகவும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.
ஒழுங்கமைக்கப்பட்ட சமூக ஊடக பிரச்சாரங்கள் பதட்டங்களை மோசமாக்கியிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. குறிப்பாக வெடுக்குநாரியில், இந்து வழிபாட்டாளர்கள் தங்கள் வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லச் சிரமங்களை எதிர்கொண்டனர்.
சில மக்களது அல்லது குழுக்களது இன மற்றும் மத அடையாளம் காரணமாக அவர்கள் வெறுப்புப் பேச்சிற்கு ஆளாகிறார்கள்.
சில மக்களது அல்லது குழுக்களது இன மற்றும் மத அடையாளம் காரணமாக அவர்கள் வெறுப்புப் பேச்சிற்கு ஆளாகிறார்கள்.
குறிப்பிட்ட இன மற்றும் மதக் குழுக்களை இலக்கு வைக்கும் தீங்கான நிகழ்நிலை உள்ளடக்கம் இருப்பதற்குத் தெளிவான சான்றுகள் காணப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை இலக்காகக் கொண்ட அவமரியாதையான சொற்பிரயோகங்கள் என்பன இதில் அடங்கும். இவ் வெறுப்புப் பேச்சுகளில் சில தேர்தல் முடிவுகளுடன் தொடர்புடையவையாக அமைந்து, சிறுபான்மை குழுக்களை நோக்கி ஏவப்படுகின்றன.
முஸ்லிம் கலாச்சாரமும் மத நடைமுறைகளும், குறிப்பாக இஸ்லாமிய பழக்கவழக்கங்கள், பல பதிவுகளில் கேலி செய்யப்பட்டுள்ளன அல்லது அவமரியாதை செய்யப்பட்டுள்ளன.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்கும் வகையில் – முக்கியமாக உள்ளூர் மட்டத்தில் – சில இடங்களில் வெறுப்புப் பேச்சு பயன்படுத்தப்பட்ட போதிலும், அரசியல் ரீதியாக வெறுப்புப் பேச்சினை ஊக்குவிக்கும் போக்குப் பாரியளவில் குறைந்துள்ளது