இழப்பென்ன நமக்கு புதிதா
நம்பிக்கை வை மனிதா – நீ
நம்பி – கை – வை
உலகின் அழிவு
வாழ்வின் இழிவு
அனைத்திலிருந்தும் மீண்டெழுவோம்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இந்த ஜகத்தின் முதலாம் விதியல்லோ
காலம் கடந்த பின்
கழிவிரக்கம் கொள்வதால்
பயனேதுமில்லை எனத் தெளிந்து – நீ
விதியினை மதியால் வெல்ல – மீண்டெழு
புல் பூண்டும் கூட முளைக்க முடியா
ஹிரோஷிமா , நாகஷாகி – அன்று
பின்தங்கியிருந்தால் – இன்று
பார் போற்றும் நாடாய் வளர்ந்திருக்குமோ
இழப்பென்ன நமக்குப் புதிதா
மனிதா – நீ
நம்பிக்கை வைத்து மீண்டெழு
அன்றைய காந்தியும் பாரதியும்
மீண்டும் மீண்டும் எழுந்ததாலே
தாய் நாட்டை காத்தனரே
மதவெறி கொண்டு இருந்திருந்தால்
மதத்தின் பெயரால் பிரிந்திருந்தால்
அன்று – பதம் பார்த்து எமை வதம் செய்திருப்பரே
மந்தை கூட்டத்தின் மீது
வேங்கை வந்து பாய்ந்த போதினும்
ஒற்றுமையாய் நீ இருந்தால்
கொண்ட கொள்கையில்
உறுதியாய் நீ இருந்தால்
இருந்தியாய் நீ அடைவாய் வெற்றியை
பார் போற்றும் உத்தமனாய் உதித்திடவே
வீழ்ந்த உலகினை மீட்டெடுத்திடவே
மீண்டெழு – மனிதா – நீ
மீண்டும் எழு
ஒன்றாய் உயர்ந்திடுவோம்
பிரிந்தால் வீழ்ந்திடுவோம்