“அன்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்து இருந்தாரே”
ஆம் இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களிலும் அன்பு எனும் வடிவத்தில் இறைவன் இருக்கிறான். இது தான் இந்து சமயத்தின் தார்பரியமே. மனிதர்கள் பிற மனிர்கள்பால் செலுத்தும் அன்பில் தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய அனைத்து மதங்களும் கூட அன்பை பெரிதும் போற்றியே உரைக்கின்றன.இதை தான் தெளிவாக திருமூலர் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மீது அன்பு செலுத்துவார் என்று வலியுறுத்துகிறார். அன்பின் மூலம் அன்பு வளரும். வெறுப்பு ஒருகுறுகிய கூட்டுக்குள் சதிராடுகிறது. அன்பு வானைப் போல் அறிவை வளரச் செய்கிறது.
கடவுள் என்பவர் ஒருவரே ஆனால் ஒவ்வொருவரும் வழிபாட்டு முறை தான் வேறுபடுகிறது. இது தான் மதங்களை உருவாக்குகிறது. இந்த வழிபாட்டுமுறையானது மக்களுடைய கலாச்சாரம், பண்பாடு, அவர்கள் வாழும் புவிப்பரப்பியல், சீதோட்சண நிலைகள் மற்றும் வாழ்வியலுக்கு அமைவாக மாறுபடுகிறுது. ஒரு மாடியின் உச்சிக்கு போக ஏணி, மூங்கில், படி, கயிறு இவற்றில் ஏதேனும் ஒன்றன் உதவியை கொண்டு ஏறலாம். அதுபோல இறைவனை அடைவதற்கு ஒவ்வொரு மதமும் வித்தியாசமான மார்க்கங்களை காட்டுகிறது.ஓர் ஏரியின் நீரைப்போல் இறைவனும், அதில் இறங்கும் படித்துறைகள் போல் தான் மதங்கள் காணப்படுகின்றன.
எல்லா மதங்களும் போற்றும் இறைவன் ஒருவனாக இருக்கும் போது ஏன் அவனை பலமடங்கு மாதிரி வர்ணிக்கிறோம்?
இதற்கான பதிலை தெளிவாக குறிப்பிடுகிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர் ‘’நீ வீட்டு எஜமான்: உன் மனைவிக்கு கணவன்; மகனுக்கு தகப்பன்: வேலைக்காரனுக்கு எஜமான் ஆனால் நீ ஒருவன் தான்.
“அவரவர்உன்னிடம் கொண்ட உறவு முறையை வைத்து உன்னை பார்ப்பது போல், பல மதத்தவரும் ஆண்டவனை பல விதத்தில் பார்க்கிறார்கள்”. இது இந்து மதத்தின் விரிந்த ஞானத்தை எடுத்துக்காட்டுகிறது.
சகிப்புத் தன்மையையும், அரவணைப்பையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. “உடலில் பட்ட காயம் மாறிவிடும் ஆனால் மனதில் பட்ட காயம் மாறாது ஆகவே யாரையும் நீ புண்படுத்தாதே” என்கிறது இந்து தர்மம்.
அனைவரும் கடவுளின் பிள்ளைகளே, இதற்குள் ஏற்றத்தாழ்வு, பிறர் வழிபடும் முறையை கொச்சைப்படுத்துதல் எல்லாம் மிகத்தவறு.
மதங்கள் உருவாகியது பிரிவினையை ஏற்படுத்த அல்ல, அன்பை ஒழுக்கத்தை போதிப்பதன் மூலம் மனிதன் சிறப்புற வாழ்ந்து இறுதியில் இறைவனை அடையவே.
ஆனால் இன்று அரசியல் உள்நோக்கங்களுக்காக பிரிவினை மற்றும் வன்முறையை தூண்டி நம் சகோதர்களை நாமே அழிக்கிறோம். சொல்லப்போனால் சிவனோ, இயேசுவோ, புத்தரோ அல்லாஹாவோ தன்னை வணங்காததற்காக தண்டிக்கப் போவதில்லை ஆனால் தன் பெயரை சொல்லி பிறரை இம்சிப்பவர்களை தண்டிப்பார்கள்.
இன்னும் ஊர்களில் இந்து ஆலய விசேடநாள்களில் தொலைதூரத்திலிருந்து வரும் அடியவர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் தண்ணீர் பந்தல் மூலம் தாகம் தீர தண்ணீர் வழங்குவதும், முஸ்லிம் நண்பன் நோன்பு திறக்கையில் இந்து நண்பன் இப்தார் உணவு வழங்குவதும் இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நல்லிணக்கத்தை தகர்க்க தவறான போதனைகள், தனிப்பட்ட வெறுப்புக்களை சாதிக்க மக்களை தூண்டி அழிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதற்கமைய அனைவரையும் சமனாய் மதிப்போம்.
#MinorMatters welcomes blog posts and articles that are original and thought provoking, written in a tone that is clear, respectful and engaging. All contributions will be curated prior to publication and contributors will be expected to adhere to the following guidelines as minimum standards for submission.
Accuracy
Only present as fact and/or information content that can be independently verified or content that is appropriately sourced from a reputed third party.
Fairness and thoroughness
Acknowledge that there may be multiple sides to any given issue and present your readers with information that is complete, comprehensive and contextual.
Privacy
We will not publish content that infringes a group or individual’s right to privacy, except in exceptional circumstances where there is a clear and valid public interest in doing so.
Transparency and accountability
Disclose your sources, deal openly with your readers and be accountable for what you submit.
Language
Be considerate of your readers. Do not use language that is obscene or explicit or racist. Do not employ threats, personal attacks or insults.
Disclaimer: the views and opinions expressed in each blog post belong solely to theirauthor and do not necessarily reflect the policies or position of #MinorMatters. Comments on the blog are the sole responsibility of their writers. #MinorMatters reserves the right to withhold publication of blog posts and comments that do not meet the website’s standards and requirements.
Comment Here